ADVERTISEMENT

“எதுக்கு நான் லாயக்கு, நான் பிரயோஜனமாக மத்தவங்களுக்கு என்ன செய்யப்போறேன்”- மேடையில் சூர்யா உருக்கம்

10:41 AM Jan 06, 2020 | santhoshkumar

நடிகர் சூர்யா திரையில் நடிப்பதை தாண்டி கல்வி கற்க இயலாத மாணவர்களுக்கு உதவும் வகையில் தன்னுடைய அகரம் அறக்கட்டளையின் மூலம் உதவி வருகிறார். இந்நிலையில் நேற்று சென்னை தி. நகரில் அகரம் அறக்கட்டளை சார்பில் ‘வித்தியாசம் தான் அழகு’ , ‘உலகம் பிறந்தது நமக்காக’ என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டயன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அப்போது பேசிய நடிகர் சூர்யா, “நன்றாக படிக்காததால் வீட்டுக்கு வருபவர்கள் எதாவது படிப்பு சம்மந்தமாக கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று கூச்சத்தோடு ஒதுங்கி நின்று இருக்கிறேன். எனக்கு பல வசதிகள் இருந்தும் கல்வியிலும் சரி, பல விஷயங்களில் நான் பின் தங்கிய மாணவனாகதான் இருந்திருக்கிறேன். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு என்ன செய்யப்போகிறேன் என்று தெரியாமல் இருந்திருக்கிறேன். எப்படி என்னுடையா அப்பா பெயரை காப்பாற்ற போகிறேன் என்கிற பயம் இருந்தது. எதற்கு நான் லாயக்கு, நான் பிரயோஜனமாக மற்றவர்களுக்கு என்ன செய்யப்போகிறேன் என்று பல கேள்விகள் இருந்தன. நடிகனுக்கான எந்த தகுதியும் இல்லாமல் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகனானேன். தகுதி இல்லாத என்னை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

அதன் காரணமாகவே என்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு திருப்பி உதவும் முயற்சியாகவே அகரம் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலமாக 2,500 மாணவர்களின் வாழ்க்கையில் கல்வி மூலம் அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறோம்.

அடுத்தகட்டமாக இணை என்கிற ஒரு திட்டத்தை தொடக்கி முதற்கட்டமாக 100 அரசு பள்ளிகளை மேம்படுத்தவும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம்” என்றார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய அகரம் அறக்கட்டளையின் முன்னாள் மாணவி தான் எப்படி இந்த நிலைக்கு வந்தேன், அதற்கு அகரம் அறக்கட்டளை எவ்வளவு உதவியது என்பதை தெரிவித்தார். அதை கேட்டுக்கொண்டிருந்த நடிகர் சூர்யா மேடையிலேயே கண் கலங்கி, அந்த மாணவி பேசி முடித்தவுடன் அரவணைத்துக்கொண்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT