சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப்போற்று. இந்த படத்தின் ஷூட்டிங் முடிவுபெற்ற நிலையில் ரிலீஸுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sooraripotru-passengers.jpg)
 style="display:block"  data-ad-client="ca-pub-7711075860389618"  data-ad-slot="8252105286"  data-ad-format="auto"  data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில் இப்படத்திலிருந்து வெளியாகும் முதல் பாடலான வெய்யோன்சில்லி பாடலை விமானத்தில் பறந்துகொண்டே நடுவானில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. இதற்காக 100 அரசு பள்ளி மாணவர்கள் விமானப் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களுடன் இணைந்து படக்குழுவினர் தங்களது முதல் சிங்கிளை வெளியிடுகின்றனர்.
இந்த அரசுப் பள்ளிக் குழந்தைகள் 100 பேரும் படக்குழுவினர் நடத்திய கட்டுரைப் போட்டியின் மூலம் தேர்வானவர்கள். ‘தங்களது மிகப்பெரிய கனவு’ என்ற தலைப்பில் மிகச்சிறந்த கட்டுரைகளை எழுதிய 100 மாணவர்கள் இந்த விமானப் பயணத்துக்குத் தேர்வாகினர். சூரரைப் போற்று திரைப்படத்துக்காக ‘ஸ்பைஸ்ஜெட்’ விமான நிறுவனம் தன்னுடைய ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 விமானத்தை வழங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று மதியம் 1:30 மணியளவில் விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பள்ளி மாணவர்கள், தங்கள் குடும்பத்தாருடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளனர். 45 நிமிட விமான பயணத்தின்போது வெய்யோசில்லி பாடல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் முடிவடைந்தபின் செய்தியாளர்களை சூர்யா சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)