ADVERTISEMENT

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘ஜெய் பீம்’ மோஷன் போஸ்டர்!

10:48 AM Oct 12, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில், தா.செ. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுக்கும் வக்கீலாக சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு நேற்று (11.10.2021) மாலை வெளியிட்டது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இந்த மோஷன் போஸ்டர், யூட்யூப் ட்ரெண்டிங்கில் 9வது இடத்தில் உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT