ADVERTISEMENT

நீளும் சூர்யா பட இயக்குநர் லிஸ்ட் - புதிதாக என்ட்ரி கொடுத்த பிரபலம்

04:54 PM Jun 23, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா, இயக்கும் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி. அவர் கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அடுத்த வருட தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் ‘கே.ஜி.எஃப்’ படத்தில் நடித்த கன்னட நடிகர் பி.எஸ். அவினாஷ் அண்மையில் இணைந்து நடித்தார். 'கங்குவா' படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தள்ளிப்போக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் வாடிவாசல் படத்திற்கு முன்பாக மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது.

இதனிடையே பாலிவுட் இயக்குநர் ஓம்பிரகாஷ் மவுரியா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படி சூர்யாவின் புது பட இயக்குநர் லிஸ்டில் பிரபல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட தற்போது ஒருவர் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குநர் போயப்பட்டி சீனு இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT