suriya

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப்படத்தினை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'வாடிவாசல்' படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டிருந்தார்.

Advertisment

இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கவுள்ளார். வெற்றிமாறன் இயக்கிவரும் 'விடுதலை' படத்தின் பணிகளும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த சில மாதங்களில் 'வாடிவாசல்' படத்தின் பணிகள் தொடங்கிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

Advertisment

இந்த நிலையில், வாடிவாசல் படத்திற்கு முன்னதாக மற்றுமொரு படத்தில் நடிக்கும் யோசனையில் சூர்யா உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'இன்று நேற்று நாளை', 'அயலான்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தினை முடித்துவிட்டு 'வாடிவாசல்' படத்தின் பணிகளில் ஈடுபட சூர்யா முடிவெடுத்துள்ளதால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில்தான் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.