ADVERTISEMENT

'கிரிக்கெட் ஜாம்பவானைச் சந்தித்த ரோலக்ஸ்' - வைரலான க்ளிக்

11:32 AM Feb 16, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். ’சூர்யா 42’ எனத் தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சூர்யா இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மும்பையில் நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த சூர்யா "மரியாதையும் அன்பும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதே போல் சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான், சச்சின் சந்திப்பு தொடர்பான புகைப்படம் வைரலானது. சமீபத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் ஒரு நிகழ்ச்சியில் சச்சினை சந்தித்தார். அப்புகைப்படமும் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT