ADVERTISEMENT

"ஓ மை காட்" சன்னி லியோனா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

06:55 PM Apr 06, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சன்னி லியோன் நடிப்பில், வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் ஹாரர் காமெடி திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'. சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வீரா சக்தி மற்றும் கே. சசிகுமார் இணைந்து தயாரிக்க, ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பேய் படங்களுக்கே உரித்தான பழைய கோட்டை, கடினமான மழை என்று சன்னி லியோன் கையில் கத்தியுடன் தோன்றியுள்ள இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்கில் பலரின் கவனத்தை பெற்று வருகிறது. மேலும் சில ரசிகர்கள் இந்த போஸ்டரை பார்த்த ஆசிரியத்தில் "ஓ மை காட்" என்று பதிவிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT