Skip to main content

''இவனுக்கு முடிவு இப்போ இல்ல... தொடரும்''-வெளியானது வெந்து தணிந்தது காடு ட்ரைலர்!

 

"There is no end for him now... it will continue"-The trailer of Vendhu Thanidhathu Kaadu

 

சிம்பு, 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சித்தி இட்னானி நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இதனையொட்டி இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் தற்பொழுது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

 

இதை படிக்காம போயிடாதீங்க !