ADVERTISEMENT

‘ஸ்பைடர்மேன்’ ட்ரைலர்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு! 

11:49 AM Aug 24, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

சோனி மற்றும் மார்வெல் நிறுவனம் இணைந்து தயாரித்த 'ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. இக்கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், காப்புரிமை விவகாரம் தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தை இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்தன.

இப்படம் தொடங்கியதிலிருந்தே படம் குறித்த தகவல்களைப் படக்குழு வெளியிடாமல் இருந்தது, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியது. இந்த நிலையில், 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தின் ட்ரைலர் நேற்று (23.08.2021) சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' ட்ரைலரைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று காலை வெளியிட்டது.

கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட பலரும் இந்தப் பாகத்திலும் நடித்துள்ள நிலையில், டாக்டர் ஆக்டோபஸ் இப்படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், இன்று காலை வெளியான ட்ரைலரில் டாக்டர் ஆக்டோபஸ் கதாபாத்திரமும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT