Skip to main content

வசூலை வாரிக்குவிக்கும் ஸ்பைடர்மேன்... 4 நாட்களில் எவ்வளவு தெரியுமா?

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் , இது ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங் படத்தின் தொடர்ச்சியாகும். ஸ்படைர்மேனாக டாம் ஹாலாண்டு நடிப்பில் கடந்தா நான்காம் தேதி இந்தியாவில் ரிலீஸானது.
 

spiderman far from home

 

 

முன்னதாக மார்வெல் தயாரிப்பில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஏப்ரல் மாதம் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் வேட்டை செய்தது. இந்த பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ஸ்பைடர் மேன் படத்தை வெளியிட்டுள்ளது மார்வெல். எண்ட் கேம் படத்தில் அயர்ன் மேன் இறந்த பின்பு அவரது இடத்தை யார் பூர்த்தி செய்வார்கள் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.
 

இந்நிலையில் ட்ரைலரில் அயர்ன்மேன் இறந்தபின் நடப்பது போன்ற கதை என்று காட்டப்பட்டது. இதுவே பலருக்கு இந்த படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டியது. இதன் காரணமாக ஸ்பைடர்மேன் படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.
 

ஸ்பைடர்மேன் பட வரிசையில் இந்தப்படம் தான் இந்தியாவில் முதல் வார இறுதியில் அதிக வசூல் செய்த படம். 2019-ம் ஆண்டு இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் முதல் வார இறுதியில் அதிக வசூல் செய்த படங்களில் 2ஆவது இடம் பிடித்துள்ளது ஸ்பைடர்மேன். முதலிடத்தில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்பைடர் மேனுக்கு குரல் கொடுத்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

Shubman Gill to voice Indian Spider-Man Pavitr Prabhakar

 

ஜோகிம் டாஸ் சாண்டோஸ், கெம்ப் பவர்ஸ், ஜஸ்டின் கே. தாம்சன் உள்ளிட்ட 3 பேர் இயக்கத்தில் அவி ஆராட், ஆமி பாஸ்கல் உள்ளிட்ட 5 பேர் தயாரிப்பில் ஷமேக் மூர், ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்  'ஸ்பைடர் மேன் - அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்'. இப்படம் வருகிற ஜூன் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ் ட்ரைலர் கடந்த மாதம் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 

ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவிலும் அதிக ரசிகர்கள் இருப்பதால் அவர்களை கவரும் வகையில் இந்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, பெங்காலி, கன்னடம் மற்றும் மலையாளம் என மொத்தம் 10 இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் ஏகப்பட்ட ஸ்பைடர் மேன்கள் இருக்கும் நிலையில் இந்திய ஸ்பைடர்மேனாக 'பவித்ர பிரபாகர்' என்ற கதாபாத்திரம் இதில் அறிமுகமாகிறது. 

 

இந்த நிலையில் பஞ்சாபி மற்றும் இந்தி மொழிக்கு பவித்ர பிரபாகர் கதாபாத்திரத்திற்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் டப்பிங் பேசியுள்ளார். இது குறித்து சுப்மன் கில் பேசுகையில், "ஸ்பைடர் மேன் கேரக்டரை பார்த்து தான் வளர்ந்தேன். இன்று அந்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார். 

 

 

 

Next Story

இந்தியாவில் தொடங்கியது 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' படத்தின் கொண்டாட்டம்

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

indian fans Celebrate spider man no way home movie

 

கற்பனை கதாபாத்திரங்களான சூப்பர் ஹீரோக்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கென்றே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் ஸ்பைடர் மேன் படத்திற்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர் மேன் ஃபார் ஃபரம் ஹோம்' திரைப்படம்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

 

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' என்ற தலைப்பில் அடுத்த பாகத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இதில் 'ஸ்பைடர் மேன் ஃபார் ஃபரம் ஹோம்' படத்தில் நடித்த டாம் ஹாலண்ட், ஜெண்டயா, வில்லெம் டஃபோ உள்ளிட்ட பலரும் இப்படத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தை மார்வெல் ஸ்டூடியோ, கொலம்பியா பிக்சர்ஸ், பாஸ்கல் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' திரைப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் ஒரு நாளுக்கு முன்பாக டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது

 

இந்நிலையில் இந்தியா முழுவதும்    'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. நேற்று மாலை  ஹைதராபாத் பிரசாத் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் முன்பதிவு திறக்கப்பட்ட 2 மணி நேரத்தில் ஐந்தாயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து  கேரளாவில் எர்ணாகுளம், கோழிக்கோடு, திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களில் அதிகாலை 5 மணிக்குத் துவங்கும் சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட்கள் திறக்கப்பட்ட சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது. அமெரிக்காவை போலவே தென்னிந்தியாவிலும் 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.