ADVERTISEMENT

பாரதிராஜாவை விமர்சித்த இயக்குநர் தேர்தலில் போட்டியா?

05:48 PM Jul 04, 2019 | santhoshkumar

அண்மையில் நடந்த தமிழ் திரையுலக இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழுவில் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனை இயக்குநர எஸ்.பி. ஜனநாதன் விமர்சித்தார். இதனையடுத்து திடீரென இயக்குநர் பாரதிராஜா ராஜினாமா செய்தார்.

தற்போது தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. வருகிற 14ஆம் தேதி நடப்பதாக இருந்த தேர்தல் 21ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

வருகிற 8 ஆம் தேதி இயக்குநர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை வடபழனியில் நடக்கிறது. இதில் வேட்புமனு தாக்கல் மற்றும் வாபஸ் குறித்த தேர்தல் அட்டவணை வெளியிடப்படுகிறது. தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் அவர் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இயக்குநர் ஜனநாதனை தலைவர் பதவிக்கு நிறுத்த ஒரு பிரிவினர் முயற்சித்து வருகிறார்கள். இயக்குநர் சங்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர்கள், 4 இணைச்செயலாளர்கள், 17 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT