ADVERTISEMENT

"கவலைப்படாதீங்க சார்!" - எஸ்.ஜே. சூர்யா ஆறுதல்!

12:52 PM Jan 12, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் நேற்று இணையத்தில் கசிந்தது. மேலும் சில சமூக ஊடகங்களிலும் இப்படக் காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. இது திரையுலகினரை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இது குறித்து இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா ட்வீட் செய்துள்ளார். அதில்...

"கவலைப்பட வேண்டாம் இயக்குனர் சார். கடவுள் உங்களுடன் இருக்கிறார். விஜய் சாரின் ரசிகர்கள் மற்றும் மக்கள் உங்களுடன் உள்ளனர். உலகெங்கிலும் இருந்து உங்களுக்காக வரும் ஆதரவு ட்வீட்டுகளை பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் 'மாஸ்டர்' படத்தின் மகத்தான வெற்றியுடன் நம் தொழில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT