SJ Suriya Bommai Press meet

பொம்மை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் ராதாமோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் நடிகைகள் சாந்தினி மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Advertisment

நிகழ்வில் கலந்துகொண்ட எஸ்.ஜே. சூர்யா பேசியதாவது, “ஹீரோவாக இன்னும் பெரிய இடத்துக்குச் செல்ல வேண்டும். அதற்கு இந்த பொம்மை படம் ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று நம்புகிறேன். ராதாமோகன் சார் சொன்ன கதை அனைவருக்கும் கனெக்ட் ஆகக்கூடிய ஒன்று. யுனிவர்சலான கதைகள் இப்போது எல்லைகளைத் தாண்டிச் செல்கின்றன. ப்ரியா பவானி சங்கருக்கு குடும்பப் பாங்கான ஒரு முகம் இருக்கிறது. எனக்கும் ப்ரியாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக செட்டாகிறது. மான்ஸ்டர் படத்தின் வெற்றியால் எனக்கு ஒரு லக்கி ஜோடியாக அவர் மாறியுள்ளார். இந்தப் படத்தை சரியான முறையில் எடுத்துள்ளார் ராதாமோகன் சார்.

Advertisment

நியூ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் அப்பா, மகனுடைய வயது ஒரு பிரச்சனையாக இருக்கும் என்பதால் அதை நான் தொடவில்லை. அஜித் சார் எடுத்துக்கொண்ட கதைகளில் எனக்கான தேவை இன்னும் வராமல் இருக்கலாம். அப்படி ஒரு கதை அமைந்தால் நிச்சயம் அவர் என்னை அழைப்பார். நானும் அவரோடு பணியாற்றுவேன்.