ADVERTISEMENT

“இதான் என் முகம்” - உண்மைச் சம்பவக் கதையில் மேஜராக சிவகார்த்திகேயன்

05:23 PM Feb 16, 2024 | kavidhasan@nak…

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். படத்திற்குத் தற்காலிகமாக 'எஸ்.கே 21' என அழைக்கப்பட்டு வந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. மேலும் இந்த கதாபாத்திரத்திற்காக ஹேர்ஸ்டைல் மாற்றியிருந்தார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பின் வெளியாகும் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘அமரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் வருகிறார். பயங்கரவாதிகளைத் தாக்க தனது டீமுடன், “இந்த ஆபரேஷனுக்கு எவனும் உன் முகத்த மூடாத. இதான் என் முகம், இந்தியன் ஆர்மியோட முகம்னு அவனுக்கு காட்டு” என வீரியமாக அவர் பேசும் வசனங்கள் இடம் பெறுகிறது.

ADVERTISEMENT

இதுபோன்று தனது குழுவிற்கு தைரியம் கொடுக்கும் வகையில் அவர் பேசும் பல வசனங்கள் டீசர் முழுவதும் இருக்கிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன், “மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். தைரியம் மற்றும் வீரம் கொண்ட பயணத்திற்கு தயாராகுங்கள்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT