sivakarthikeyan in new look for his 21movie

Advertisment

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், தற்காலிகமாக 'எஸ்.கே 21' என அழைக்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இதில் ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடிப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அதன் காரணத்தால் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த கதாபாத்திரத்திற்காக ஹேர்ஸ்டைல் மாற்றியிருந்த நிலையில், தலையில் தொப்பி அணிந்து மறைத்தபடியே பொதுவெளிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் தோன்றி வந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக தனது லுக்கை மாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இது க்ளீன் ஷேவ் செய்து இளமைத்தோற்றத்தில் காணப்படுகிறார். இதனால் அந்த படத்தில் வரும் இளம் வயது காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

இப்படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதை தவிர்த்து ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.