ADVERTISEMENT

‘இயக்குநரிடம் அதை குறைக்க சொல்லி வேண்டுகோள் வைத்தேன்’- சிவகார்த்திகேயன்

11:04 AM Jul 03, 2019 | santhoshkumar

கனா படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தை தயாரித்தார். இது ‘பிளாக் ஷீப்’ கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரியோ ராஜ், ஷெரில், நாஞ்சில் சம்பத், ராதாரவி, ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பேசப்படவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு ரசிகர்களிடையே இருந்தது. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சமூக கருத்து என்ற ஃபார்முலாவில் எடுக்கப்பட்ட இந்த படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு வெற்றியை தந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய சிவகார்த்திகேயன், “இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன் பயத்தை விட நம்பிக்கையே அதிகமாக இருந்தது. இந்த டீமை மிகவும் பிடிக்கும். இவர்களால் இது முடியும் என்று நம்பினோம். முதலில் திரைக்கதையை படிக்கும்போது நிறைய ஸ்பூஃப் விஷயங்கள் இதில் உள்ளன. இதைக் குறைத்து விடுமாறு அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன்.

அவர்கள் கிளைமாக்ஸ் காட்சியை எழுதியிருந்த விதம்தான் நாங்கள் இந்தப் படத்தை எடுக்கக் காரணமாக அமைந்தது. நான் படித்ததை விட, படத்தில் இரட்டிப்பாக இருந்தது. அந்த கிளைமாக்ஸ் தான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம்.

இந்த விழாவுக்கு வரும்போது ஏர்போர்ட்டில் ஒரு அம்மா என்னிடம் “ரொம்ப நல்ல படம் எடுத்திருக்கீங்க.. உங்களைப் பாராட்டி கடிதம் எழுதணும்னு என்று நினைத்தேன். ஆனா இப்ப நேர்லயே சொல்லிட்டேன்” என்று கூறினார். இதுதான் இந்தப் படத்தின் வெற்றி என்று நான் நம்புகிறேன். தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதே என் நண்பர்களுக்காகத்தான்.” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT