சிவகார்த்திகேயன் -பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

''நம்ம வீட்டு பிள்ளை'' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு முதலில் எம்.ஜி.ஆர் படமான 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் டைட்டிலை வைக்க படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அப்படத்தின் தயாரிப்பு தரப்பில் இதற்கு அனுமதி கிடைகாததால்தான் தற்போது இப்படத்திற்கு 'நம்ம வீட்டு பிள்ளை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.