ADVERTISEMENT

மிஸ் இந்தியா பட்டம் வென்ற கர்நாடக அழகி

11:12 AM Jul 04, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

விஎல்சிசி ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நேற்று(3.7.20220) நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 31 மாடல் அழகிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடிகைகள் நேஹா தூபியா, மலாய்கா அரோரா, நடிகா் டினோ மோரியா, வடிவமைப்பாளா்கள் ரோகித் காந்தி, ராகுல் கன்னா, நடன இயக்குநா் ஷியாமக் தவாா், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் இறுதிச் சுற்றின் நடுவா்களாக இருந்தனர்.

இந்த போட்டியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சினி ஷெட்டி என்பவர் "ஃபெமினா மிஸ் இந்தியா 2022" பட்டத்தை தட்டிச்சென்றார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரூபல் சவுகான் முதல் ரன்னர் வெற்றியாளராகவும், உத்தரப்பிரதேசத்தின் ஷினாதா சவுகான் இரண்டாவது ரன்னர் வெற்றியாளராகவும் தேர்வாகினர்.

மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதன் மூலம் 71 வது உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள சினி ஷெட்டி தேர்வாகியுள்ளார். இதனை தொடர்ந்து சினி ஷெட்டிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT