மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா இன்று (16/07/2021) இரவு 07.00 மணிக்கு சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் எடியூரப்பா மேகதாது அணைக்கு உடனே அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, டெல்லியில் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்த தமிழக அனைத்துக் கட்சிக் குழு மேகதாதுவில் அணைக் கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தியிருந்தது.