ADVERTISEMENT

கையில் துப்பாக்கியுடன் கோபமாக ஸ்ருதிஹாசன்

06:53 PM Dec 20, 2023 | kavidhasan@nak…

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதைத் தவிர்த்து 'தி ஐ' (The Eye) என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

சமீப காலமாக தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆனால் இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்படுகிறது. பான் இந்தியா படமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அதிவி சேஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ஷேன்யில் டியோ இயக்குகிறார். சுப்ரியா யர்லகடா தயாரிக்கும் இப்படத்திற்கு பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. டகோயிட் (Dacoit) எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டீசரில் ஸ்ருதிஹாசன் கையில் துப்பாக்கியுடன் கோபமாக நடந்து வருகிறார். மேலும் இதுவரை அவர் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT