/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/295_2.jpg)
தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘சலார்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ‘கே ஜி எஃப்’ படப்புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இதனிடையே மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் அவரின் 154 வது படத்திலும், பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் திரைபிரபலங்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர்.
அந்த வகையில் சமீபத்தில் தனது சமூக வலைதளபக்கத்தில் 'தான் மோசமான பிசிஓஎஸ் என்ற ஹார்மோன் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவதாகவும், இதனால் தன் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார் ஸ்ருதிஹாசன். இது தொடர்பாக பலவிதமான செய்திகள் ஊடகங்களில் வெளியானது.
இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், " என் உடல்நிலை மோசமாக இருப்பதாக பல செய்திகள் வெளியாகின. ஆனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நான் நலமாக தான் இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். வதந்திகளுக்கு விளக்கமளித்து ஸ்ருதிஹாசன் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)