ADVERTISEMENT

"எதுவும் நெருங்க முடியாது" - கமல்ஹாசனுக்கு ஸ்ருதிஹாசன் வாழ்த்து

12:31 PM Aug 12, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய திரைத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வரும் கமல்ஹாசன், கிட்டத்தட்ட அனைத்து சினிமா துறைகளிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' படம் வெளியாகி இன்றுடன் 63 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் திரைத்துறையில் 63 ஆண்டுகளைக் கடந்து 64 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் கமல்ஹாசன். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில், "வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி, விருதுகள் மற்றும் சோதனைகள். அவர் அனைத்தையும் பார்த்தவர். ஆனால், உலக நாயகன் மற்றும் சினிமாவை உயர்த்த அவரின் சோர்வில்லாத உழைப்புக்கிடையே எதுவொன்றாலும் நெருங்க முடியாது. ஆறு தசாப்தங்களின் ஒப்பற்ற அரசர், தற்போது சினிமாவில் தன்னுடைய 64 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் பாலிவுட்டில் நாக் அஷ்வின் இயக்கும், 'கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அ. வினோத் இயக்கும் புதிய படம், மணிரத்னம் இயக்கும் ஒரு படம் மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT