Skip to main content

“வெல்லுவான் புகழ் அள்ளுவான்” - ரஜினியை தொடர்ந்து ரீ ரிலீஸாகும் கமல் படம்  

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

kamal Aalavandhan movie re release update

 

கமல்ஹாசன் கதை, திரைக்கதையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்த தேதிகளில் இரண்டு மொழிகளிலும் வெளியானது.

 

இப்படத்தில் இடம்பெற்ற ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகள் உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது. மேலும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவின்டின் டரான்டினோ, "ஆளவந்தான் படத்தில் வரும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சி தான் எனது 'கில் பில்' படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்கு உத்வேகமாக அமைந்தது" என தன்னிடம் கூறியதாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்திருந்தார். இப்படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பணிகளை கவனித்த மதுசூதனனுக்கு 49வது தேசிய விருது விழாவில் தேசிய விருது கொடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் ஆளவந்தான் படம் 12 வருடம் கழித்து ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில் உலகெங்கும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அவரது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பான போஸ்டர் வெளியிட்டுள்ள நிலையில் அதில் "வெல்லுவான் புகழ் அள்ளுவான்" எனக் குறிப்பிட்டு விரைவில் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகும் எனப் பகிர்ந்துள்ளார்.

 

சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் அவ்வப்போது புதிய நவீன தொழில் தொழில்நுட்பத்திற்கேற்ப மாற்றி ரீ ரிலீசாகிறது. அந்த வகையில் ரஜினியின் 'பாபா' படம் கடந்த மாதம் வெளியானது. இது பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் அதனைத் தொடர்ந்து தற்போது கமலின் ஆளவந்தான் படம் வெளியாகவுள்ள செய்தி கமல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உறையவைக்கும் காட்சிகள்” - பிரபலங்களின் பாராட்டில் ஆடுஜீவிதம் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
maniratnam kamal praised aadujeevitham movie

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடுஜீவிதம்’ நாவலை, அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஆடு மேய்க்கும் தொழிலாளியாகச் சேர்கிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலியை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது. 

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகின்ற 28 ஆம் தேதி இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரையிடலுக்கு பின் பலரும் படக்குழுவை பாராட்டிய நிலையில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். 

கமல்ஹாசன் கூறுகையில், “இயக்குநர் பிளெஸ்ஸிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உண்மையாகவே கடின உழைப்பை கொடுத்துள்ளார். கேமராமேனும் சிரமப்பட்டுள்ளார். படக்குழு இவ்வளவு தூரம் செல்வார்கள் என நினைக்கவில்லை. சிறந்த படம் என படமெடுப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அதை மக்களும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்றார். மணிரத்னம், பேசுகையில், “உறையவைக்கும் காட்சிகள். ப்ரித்விராஜ் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மொத்த படக்குழுவும் தான். எப்படி இப்படத்தை உருவாக்கினார்கள் என தெரியவில்லை. அவர்கள் மீது பொறாமை கொள்ளவில்லை. படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்றார். 

Next Story

‘சண்டை, பிரிவு, அன்பு’ - லோகேஷ் - ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Lokesh Kanagaraj, Shruti Haasan inimel song released

கமலின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் இசையில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘இனிமேல்’. இப்பாடலுக்கு கமல் வரிகள் எழுதியிருக்கும் நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். துவர்கேஷ் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்தின் டீசர் கடந்த 21ஆம் தேதி வெளியானது. 

டீசரில் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் ரொமான்ஸில் இருக்கும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றது. இந்த டீசர் சமூக வலைத்தலங்களில் வைரலானது. மேலும் இருவரும் இணைந்து புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருந்தனர். இன்று மாலை 4 மணிக்கு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி தற்போது இனிமேல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இருவரும் அறிமுகமாவதில் தொடங்கி, காதலர்களாக மாறி திருமணம் வரை சென்று, பின்பு சண்டை, பிரிவு, அன்பு என அனைத்தும் கலந்து சொல்லப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.