ADVERTISEMENT

60 வயது மூதாட்டியின் ஆசை - உடனடியாக நிறைவேற்றிய ஷாருக்கான்

05:07 PM May 24, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஷிவானி சக்ரபோர்த்தி. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் ஷாருக்கானின் தீவிர ரசிகர். அவரை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்பதை வாழ்நாள் ஆசையில் ஒன்றாக வைத்துள்ளார்.

இத்தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ, ஷாருக்கான் காதுக்கும் இத்தகவல் சென்றுள்ளது. உடனடியாக அந்த மூதாட்டிக்கு வீடியோ கால் மூலமாக சர்ப்ரைஸ் செய்து அவரின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றி உள்ளார் ஷாருக்கான். அப்போது, அப்பாட்டியின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். அவருடன் 40 நிமிடம் பேசியுள்ள ஷாருக்கான் அவரை நேரில் வந்து பார்ப்பதாகவும் கூறினார். ஷாருக்கானின் இந்த செயல் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 'டன்கி' படத்தில் நடிக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT