ADVERTISEMENT

பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி 

01:59 PM Jul 31, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

கே ப்ரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் பலர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதில் ஒருவரான இயக்குனர் சீனு ராமசாமி விழாவில் பேசியபோது.... "இடம் பொருள் ஏவல் படத்துக்காக இளைய இசைஞானி யுவன் ஷங்கர் ராஜாவை முதன்முறையாக சந்தித்தேன். அதன் பிறகு 'தர்மதுரை' படத்திலும், அடுத்து 'கண்ணே கலைமானே' படத்திலும் இணைந்து எங்கள் உறவு பலமானது. அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில், நான் இயக்கும் படத்தை யுவன் தான் தயாரிக்க இருக்கிறார்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT