"பாகுபலி-2' படத்தை வெளியிட்ட எஸ்.என். ராஜராஜனின் கே புரொடக்ஷன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் பிலிம்ஸ்( பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து தற்போது "பியார் பிரேமா காதல்' என்ற படத்தைத் தயாரித்துக்கொண்டு இருக்கின்றன.

vijaysethupathi

இதைத் தொடர்ந்து விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்க "பண்ணையாரும் பத்மினியும்', "சேதுபதி' வெற்றிப் படத்தை இயக்கிய எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில் புதிய படத்தைத் தயாரிக்கிறார்கள். விஜய்சேதுபதி நடிக்கும் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்படவுள்ளது.

Advertisment

இந்தப் படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார். ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளனர்.

இயக்குனர் எஸ்.யூ. அருண்குமார், நாயகன் விஜய்சேதுபதி இருவரும் இணையும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment