ADVERTISEMENT

‘நடவடிக்கை எடுக்கப்படும்’- சிவகார்த்திகேயன் வாக்களித்தது குறித்து சத்யபிரதா சாஹூ

02:55 PM Apr 23, 2019 | santhoshkumar

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் காலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பள்ளியில் வாக்களிக்க வந்திருந்தார். அந்த வாக்குச் சாவடியில் அவரது மனைவிக்கு மட்டும் தான் ஓட்டு இருந்தது. சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டிருந்தது. இதனால் வாக்களிக்காமல் சென்று விட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பின்னர் சிவகார்த்தியனும் அவரது மனைவி ஆர்த்தியும் மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்து தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அலுவலர், தங்களது மேலதிகாரிக்கு இந்த தகவல் தந்ததும், டி.ஆர்.ஓ. அந்தஸ்திலுள்ள அந்த மேலதிகாரி, பூத் அலுவலர்கள் மூலமாக பூத்திலிருந்த அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி, சிவகார்த்திகேயன் சேலஞ்ச் ஓட்டு போட அனுமதி பெற்றிருக்கிறார். இதனை தொடர்ந்து, வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டார் சிவகார்த்திக்கேயன். சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதித்தது தவறு என்று பலரும் அப்போது கூறி வந்தனர்.


இந்நிலையில் அதுகுறித்து பேசியுள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ, “வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT