ADVERTISEMENT

பூரித்த சஞ்சய் தத் - நெகிழ்ந்த லோகேஷ் கனகராஜ்

05:45 PM Mar 14, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2017 ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்தடுத்து கார்த்தி நடிப்பில் கைதி மற்றும் விஜய் நடிப்பில் மாஸ்டர் படங்கள் வெளியானது. இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய 'விக்ரம்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து 'லியோ' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் லோகேஷ் கனகராஜுக்கு திரையுலகத்தைச் சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய், த்ரிஷா உள்ளிட்ட லியோ படக்குழுவினர் பலரும் வாழ்த்திய நிலையில் நடிகர் சஞ்சய் தத், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுடைய உடன் பிறப்பு, மகன், குடும்பம் லோகேஷ் கனகராஜ். கடவுள் உங்களுக்கு வெற்றி, அமைதி, சந்தோஷம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கொடுப்பார். நான் எப்பொழுதும் உன் வாழ்க்கையில் இருப்பேன். லவ் யூ" என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்ட லோகேஷ் கனகராஜ், உங்களின் வாழ்த்து நிறைய அர்த்தங்களை தருகிறது என நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT