ADVERTISEMENT

'ஜப்பானே சொல்லும்போது நாம எப்படி நடந்துக்கணும்' - சமுத்திரக்கனி வருத்தம்!

11:23 AM Apr 20, 2019 | santhosh

ஸ்டண்ட் யூனியனின் 52 ஆம் ஆண்டு விழா சென்னையில் நடை பெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் எஸ்.தாணு, சமுத்திரகனி, ஜாக்குவார் தங்கம், தடா சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்று சங்கத்தை சுற்றியுள்ள இடங்களில் மரக் கன்றுகளை நட்டு வைத்தார்கள். மூத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் 5 பேர், மூத்த ஸ்டண்ட் நடிகர்கள் 5 பேரையும் கெளரவப் படுத்தினர். அப்போது விழாவில் நடிகர் சமுத்திரகனி பேசும்போது....

ADVERTISEMENT

ADVERTISEMENT

"இப்போ இங்கே நுழையும்போதே காசு கொடுத்து வாங்கிய தண்ணீர் பாட்டிலை கொடுத்தார்கள். காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலைக்கு இந்த தலைமுறையினரே தள்ளப்பட்டு விட்டோம். இப்படியே போனால் அடுத்த தலைமுறையினரின் கதி என்னவாகும் என்று யோசித்து பார்க்க வேண்டும். ஒவ்வொருத்தரும் மரம் நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மரங்களை வெட்டாதீர்கள். அந்த மரங்கள் தான் எங்கள் நாட்டை பாதுகாக்கும் அரண் போல இருக்கு. எங்கள் நாடு இயற்கையிலிருந்து பாதுகாக்கப் படுவதே அந்த மரங்கள் தான். அதை பாதுகாக்க நாங்கள் பண உதவி செய்கிறோம் என்று ஜப்பான் அரசாங்கம் நமக்கு உதவி செய்கிறது. நம்ம நாட்டு மரங்கள் இன்னொரு நாட்டுக்கும் உதவியா இருக்குன்னு அவங்களே சொல்லும் போது நாம எப்படி பாதுகாக்கணும். நாளைய தலைமுறை வாழ நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும்" என்றார். விழாவில் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றனர். விழாவிற்கு வந்தவர்களை தலைவர் சுப்ரீம் சுந்தர் மற்றும் செயலாளர் பொன்னுசாமி பொருளாளர் ஜான் மற்றும் நிர்வாகக் குழுவினர் வரவேற்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT