samuthrakani

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'. சமுத்திர பாண்டி என்ற புரட்சிகர வாத்தியாராக நாயகன் சமுத்திரகனி நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார். கதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை சக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அப்போது விழாவில் கலந்துகொண்ட சமுத்திரக்கனி படம் குறித்து பேசியபோது.... "இது ஒரு நல்ல தருணம். நாம் கடந்து வந்த விஷயம். நாம் வேணாம்னு விட்டுட்டு வந்த விஷயத்தை இதில் எடுத்து இருக்காங்க. அது அடுத்த தலைமுறையை எப்படி பாதிக்கும். அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டுட்டு போறோம்னு இதில் சொல்லி இருக்கார் டைரக்டர் இசக்கி கார்வண்ணன். அவரை பற்றி சொல்லனும்னா இளம் கன்று பயமறியாதுன்னு சொல்வோமே அது மாதிரி தான். திடீரென்று ஒரு நாள் வந்து சர்கார் படத்து ரிலீஸ் தேதிக்கே நம்ம படத்தையும் ரிலீஸ் செய்வோம்ன்னார். நான் தான் அப்படியெல்லாம் வேணாம். நமக்குன்னு ஒரு தேதி வரும். அப்ப ரிலீஸ் செய்வோம் என்று அனுப்பி வைத்தேன். அந்தளவுக்கு அவருக்கு படத்து மேலே அவ்வளவு நம்பிக்கை அவருக்கு" என்றார்.