ADVERTISEMENT

“இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்”- நடிகை சாக்‌ஷி நன்றி!

10:43 AM Jul 01, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா அடிக்கடி அத்துமீறி நுழைந்து பதற்றத்தை ஏற்படுத்துவருகிறது. அண்மையில் லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவமும் இந்திய ராணுவமும் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் பலியானதாக சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பலரும் சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் நடிகை சாக்‌ஷி அகர்வால், தன்னை டிக்டாக்லிருந்து விலக்கிக் கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீனத் தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில். மத்திய அரசு டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை விதித்திருப்பதை அறிந்து மத்திய அரசிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால்

இது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய முடிவு என்றும், இந்த முடிவு இந்தியாவின் சுயசார்பு திறனை மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT