Skip to main content

“மதுமிதா செய்தது தவறு... சேரன்தான் வின்னராக வேண்டும்”- பிக்பாஸ் சாக்‌ஷி பேட்டி

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

இந்த வருடத்திற்காக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சி பத்து வாரங்களை தாண்டிவிட்டது.  பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, மதுமிதா ஆகியோரைத் தொடர்ந்து அபிராமி 9-வது போட்டியாளராக வெளியேறினார். இந்த வருடம் பல சர்ச்சைகளை உள்ளடக்கி சென்றுகொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரீயாக கஸ்தூரியும், மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவும் மீண்டும் நுழைந்திருக்கின்றனர்.
 

sakshi

 

 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் சாக்‌ஷி தற்போது தன்னுடைய பழைய பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள தனியார் மால் ஒன்றில் ஆடை வடிவமைப்பின் பேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது. அதில் சாக்‌ஷி மற்றும் மீரா மிதுன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
 

இந்த நிகழ்ச்சியை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சாக்‌ஷி பேசியது, பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த பிறகே ஊதியம் வழங்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது என்று மதுமிதா புகார் குறித்து தெரிவித்திருந்தார். இதனால் மதுமிதா செய்தது தவறு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சேரன் வெற்றிபெற்றால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மாற்றங்கள் வரும்... பாசிட்டிவாக யோசிப்போம்" - சாக்‌ஷி அகர்வால்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

sakshi agarwal about wrestlers protest

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். 

 

இதையடுத்து டெல்லி போலீசார் பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். இருப்பினும் சரண் சிங் மீது கைது உள்ளிட்ட எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் சந்தித்தார். அப்போது 5 நாட்கள் கால அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து  விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாத் இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்க ஜூன் 9 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி கெடு விதித்து இருந்தார். நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மக்கள் உள்பட திரைப் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர். 

 

இந்நிலையில் நடிகை சாக்‌ஷி அகர்வால் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, "இந்த விவகாரம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது நாட்டில் நிறைய விஷயங்களுக்கு நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக பெண்கள் அதிகாரத்துக்கு வருதல்; பாலியல் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் என சொல்லலாம். அதனால் பாசிட்டிவாக யோசிப்போம். சிறந்த நாட்டை உருவாக்க ஒன்றாக உழைத்திடுவோம்" என்றார். 

 

 

Next Story

"மக்களுக்கு தெரியும் யாருக்கு எப்போது அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று..." - ஷாக்சி அகர்வால் 

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

sakshi agarwal talks about people know who to give credit to and when

 

நடிகை ஷாக்சி அகர்வால் தனது திரைத்துறை அனுபவங்கள் பற்றி நக்கீரன் ஸ்டுடியோ யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியிலிருந்து, "சினிமா பற்றி நான் முழுவதுமாக கற்றுக் கொள்ளவில்லை என்றுதான் சொல்லுவேன். திரைத்துறையை பொறுத்தவரை அது பெரிய கடல் போன்றது. அதில் நான் ஒரு சிறிய துளி தான். நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. நிறைய பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த பயணத்தில் ஒவ்வொரு நாளும் ஏற்றம் இறக்கம் இருக்கும். அதனை நம்முடைய தலைக்கு ஏற்றாமல் பயணிக்க வேண்டும்.

 

கெஸ்ட் 2 படம் என்பது அனிமல் த்ரில்லர் படம். கொரோனா தீவிரமாக இருந்தபோது 45 நாட்கள் கொடைக்கானலில் படப்பிடிப்பு இருந்தது. கேரளாவில் 20 நாட்கள் படப்பிடிப்பு இருந்தது. கொடைக்கானல் படப்பிடிப்பு என்பது அசவுகரியமாக தான் இருந்தது. கேரவன் எல்லாம் ரோட்டில் தான் இருக்கும் ஆனால் படப்பிடிப்பு எல்லாம் காட்டுக்கு நடுவில் இருக்கும். ஒவ்வொரு முறையும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றாலும் 2 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். அந்த சூழலில் தான் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் குளிராக இருக்கும். படப்பிடிப்பின் போது இது தான் சீன் என்று சொன்னார்கள். டயலாக் எல்லாம் மனப்பாடம் செய்துவிட்டு போனால் நேச்சுரலாக இருக்காது என்பதால் ஆன் ஸ்பாட்டில் தான் டயலாக் சொல்லுவார்கள். ஒரு ஷாட்  ஒரே டேக்கில் எடுத்ததை மொத்த படக்குழுவும்  ரசித்த  அந்த நிகழ்வை நான் மறக்க முடியாது.

 

ராஜா ராணி படத்திலிருந்து தற்போது வரைக்கும் உள்ள இந்த கற்றல் அனுபவத்தை ரெண்டு வார்த்தையில் சொல்ல முடியாது. அது ஆறு வருட அனுபவம். ஒரே ஒரு விஷயம் நம்முடைய அர்ப்பணிப்பு, ஒழுக்கம் இதெல்லாம் ரொம்ப முக்கியம். இந்த விஷயங்களை மட்டும் நாம் ஃபாலோ செய்தால் போதும். சில பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால் நடிகர்கள், நடிகைகள் இப்படி இருப்பார்கள் அப்படி இருப்பார்கள் என்று. திரைத்துறைக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும் யாருக்கு எப்போது அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று." எனத் தெரிவித்தார்.