ADVERTISEMENT

"காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்ததும், இஸ்லாமியர்களுக்கு நடப்பதும் ஒன்றுதான்" - நடிகை சாய் பல்லவி 

12:37 PM Jun 15, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று, அதன்பின் மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி பலரைக் கவர்ந்தார் சாய் பல்லவி. தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரும் இவர், தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே படத்திலும், பாவக் கதைகள் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள ’எஸ்.கே 21’படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இதனிடையே சாய் பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து விராட பருவம் படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி நக்சலைட்டாக நடித்துள்ள இப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் சாய் பல்லவி மற்றும் படக்குழு இறங்கியுள்ளன. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சாய் பல்லவி பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், " சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதாகக் காட்டியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், கரோனா காலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்களை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லித் தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவும், ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT