ADVERTISEMENT

காளி வெங்கட்டுடன் கைக்கோர்க்கும் சாய் பல்லவி?

01:13 PM Jan 27, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘ப்ரேமம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் இருந்து பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் ‘தியா’, ‘மாரி 2’, ‘என்.ஜி.கே’ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், அவர் நடித்தப் படங்கள் வணிக ரீதியில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெறவில்லை. அதே நேரத்தில், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம்வரும் சாய் பல்லவி, ராணா, நாக சைத்தன்யா, பவன் கல்யாண் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், காமெடி நடிகரான காளி வெங்கட் நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதில், இறுதி முடிவு எட்டும்பட்சத்தில், இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர் நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT