Skip to main content

“முற்றிலும் மோசமானது” - சாய் பல்லவி வருத்தம்

 

sai pallavi explained about his marriage rumours

 

தமிழ், மலையாளம், தெலுங்கு எனத் தென்னிந்திய அளவில் பிரபல ஹீரோயினாக வலம் வரும் சாய் பல்லவி, தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் நாக சைதன்யாவின் 23வது படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. இதுபோக இந்தியில் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நடிக்கும் ஒரு பெயரிடாத படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்த சூழலில் கடந்த சில தினங்களாக சிவகார்த்திகேயன் படத்தின் பூஜையின் போது ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சாய் பல்லவி இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாக வதந்திகள் தீயாய்ப் பரவின. 

 

இந்த நிலையில் இந்த வதந்தி குறித்து விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், இந்த வதந்திகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அது குடும்பம் மற்றும் நண்பர்களை சம்பந்தப்படுத்தி இருப்பதால், நான் பேசி ஆக வேண்டும். என்னுடைய படத்தின் பூஜை விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வேண்டுமென்றே எடிட் செய்து, பணம் கொடுக்கப்பட்டு கேவலமான எண்ணத்துடன் பரவவிட்டுள்ளனர். 

 

என்னுடைய பட அறிவிப்புகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வரும் வேளையில், இது போன்ற வேலையில்லா செயல்களுக்கு விளக்கமளிப்பது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற அசௌகரியத்தை ஏற்படுத்துவது முற்றிலும் மோசமானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.