ADVERTISEMENT

ரிலீஸ் தேதியை உறுதி செய்த 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு !

06:13 PM Jan 31, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கியுள்ளார்.. இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 7ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து படக்குழு நாட்டில் கரோனா தொற்று குறைந்து திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டால் 'ஆர்.ஆர்.ஆர்' படம் மார்ச் 18 ஆம் தேதி வெளியாகும், இல்லையெனில் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளது. அதன்படி ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT