/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/857_1.jpg)
இயக்குநர் ராஜமௌலி ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆலியா பட்,அஜய் தேவ்கன் ஆகியோரை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்குமத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இயக்குநர்ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படங்கள் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் தற்போது ஆர்.ஆர்.ஆர் படமும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இப்படத்தை ரசிகர்கள், திரை பிரபலங்கள், சினிமா விமர்சகர்கள் என பலரும் கொண்டாடினர்.
இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்த டாக்டர் ஸ்ட்ரேஞ் படத்தின் எழுத்தாளர்ராபர்ட் கார்கில் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், " இதுவரை நான் பார்த்த படங்களிலேயேமிகவும் வெறித்தனமான, நேர்மையான, வித்தியாசமான பிளாக்பஸ்டர் படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தை பார்த்த பிறகு நானும் ஆர்.ஆர்.ஆர் ரசிகன் ஆகிவிட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)