ADVERTISEMENT

'எங்க டாடி செம்ம கேடி' - ஆர்.ஜே பாலாஜி குரலில் கவனம் ஈர்க்கும் பாடல்

01:36 PM May 30, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஆர்.ஜே.பாலாஜி எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்தியில் வெற்றி பெற்ற ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை 'வீட்ல விசேஷங்க' என்ற பெயரில் ஆர்.ஜே பாலாஜி இயக்கவும் செய்கிறார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் 'வீட்ல விசேஷங்க' படத்தின் 'டாடி சாங்' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. கல்யாண வயதில் குழந்தைகள் இருக்கும் போது அம்மா கர்ப்பமாகிறாள். அதனால் கதாநாயகன் வெளியில்படும் அவமானங்களை காமெடி கலந்த கலாட்டாவுடன் சொல்வது போல் இப்பாடல் வெளிவந்திருக்கிறது. கிரிஷ் மற்றும் ஆர்.ஜே பாலாஜி குரலில் வெளிவந்துள்ள இப்பாடல் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஜூன் மாதம் 17-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT