amman

'எல்.கே.ஜி' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் தீபாவளி அன்று 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. மூக்குத்தி அம்மன் படத்தின் வெளியீட்டை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி, நமக்குப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி வருமாறு:-

Advertisment

மூக்குத்தி அம்மன் படத்தில் வருவது போல், அம்மன் உங்கள் முன் வந்தால் இல்லை ஒரு சக்தி கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?

எனக்கு என் தாத்தா பாட்டியை ரொம்பப் பிடிக்கும். தாத்தா எனக்கு உத்வேகத்தை அளித்தவர். பாட்டி, சிறுவயதிலிருந்தே என்னைப் பாசமாக, பாதுகாப்பாகப்பார்த்துக்கொண்டவர். எனக்கு அவர்களோடு உணர்வுப்பூர்வமான தொடர்பு இருந்தது. அவர்கள் இருவரும் இறந்துவிட்டார்கள். எனக்கு ஒரு சக்தி கிடைத்தால் அவர்கள் திரும்ப வரவேண்டுமெனக் கேட்பேன்.

Advertisment

இயக்குனர் தகுதியோடு கோடம்பாக்கத்தில் ஏராளமானோர் இருக்கிறார்கள். நீங்கள் தொடக்கத்தில், இணை இயக்குனராக இருந்தவருக்கு இயக்குனர் வாய்ப்பைக் கொடுத்துள்ளீர்கள். இந்த நெகிழ்ச்சியான தருணம் எப்படி இருக்கிறது?

நெகிழ்ச்சியான தருணம் என்பதைத் தாண்டி, திருப்தியளிக்கும் தருணமாக இருந்தது. 'எல்.கே.ஜி' படத்தில் படிக்கும்போதே, இப்படத்தின் இயக்குனர் சரவணனிடம் நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்றேன். அப்போது அவர் எல்லா ஹீரோவும் சொல்வதுபோல் சொல்கிறேன் என நினைத்தார். தயாரிப்பாளரிடம் பேசிவிட்டு, அவரிடம் சொல்லும்போதுதான் அதிர்ச்சியானார். 2001லிருந்து சினிமாவில் இருக்கும் அவரின் பக்குவம்தான் இப்படம் நன்றாக வருவதற்குக் காரணமாக இருக்கிறது.

இப்படம் மத அரசியலை தீவிரமாக எதிர்க்கும் படமாக இருக்குமா?

இப்படம் எதையும் எதிர்க்கும் படமாகவோ, ஆதரிக்கும் படமாகவோ இருக்காது. நாம் இப்போது தீவிரம் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறோம் என நினைக்கிறேன். திரைப்படங்களில் எதிர்பார்க்கும் தீவிரத்தை, நாம் தலைவர்களிடம் எதிர்பார்ப்பதில்லை.கடவுள் நமக்கு தைரியம் மட்டும்தான் தருவார் எனச்சொல்லும் படமாக இருக்கும்.

ஆடிக்குத்து பாட்டில், நீங்கள் வேல் மீது கைவைத்துச் சாமியாடுவது போல் இருக்கிறது. அதைப் பற்றி கூறுங்கள்?

cnc

எனக்கு அந்தப் பாட்டில் ஆடக் கூடாது. ஆனால் அந்தப் பாட்டில் வரவேண்டும், அதனால் சாமியாடினேன். உண்மையில், அந்தப் பாடலை எடுக்கும்போது நெறைய ஜூனியர் ஆர்டிஸ்டுகளுக்கு சாமி வந்தது.

பழைய அம்மன் படங்களில் நெருப்பு மிதிப்பது போன்றசீன்கள் இருக்கும். அதெல்லாம் ஆடிக்குத்து பாடலில் இல்லை, வேண்டாம் என விட்டுவிட்டீர்களா?

1980 மற்றும் 90 களில் வரும் படம்போல் இது இருக்காது. அதே உணர்வில் இப்போதுள்ள காலகட்டத்துக்கு ஏற்றார் போல் இப்படம் இருக்கும். பெண் நாகமாக மாறுவது, நாக்கை நீட்டி மானிட்டரை தொடுவது போன்ற காட்சிகளெல்லாம் இதில் இருக்காது.

கனவில்நயன்தாராவரவில்லை, இவர்கள்தான்வந்தார்கள் - ஆர்.ஜே. பாலாஜிஇன்டெர்வியூ... பாகம்-1