ADVERTISEMENT

'2.0 படத்தில் ஏமி ஜாக்சனுக்கு டப்பிங் பேசியது பெரிய சவாலாக இருந்தது'  - ரவீணா ரவி

03:43 PM Oct 27, 2018 | santhosh

ADVERTISEMENT

சினிமாவில் அழகான மற்றும் இனிமையான குரல் எப்போதுமே ஒரு நடிகைக்கு முக்கியமான அங்கமாக இருக்கிறது. தன்னுடைய தனித்துவமான உச்சரிப்புகளால், பல முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்த ரவீணா ரவி, தற்போது நடிகையாகவும் மாறியிருக்கிறார். பி.ஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் மற்றும் வைட் மூன் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் சுரேஷ் ரவி மற்றும் ரவீணா ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஆர்.டி.எம் படத்தை இயக்கியிருக்கிறார். மைம் கோபி, கல்லூரி வினோத் மற்றும் சில பிரபல நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்க்கும் இப்படம் குறித்து ரவீணா ரவி பேசும்போது....

ADVERTISEMENT

"படங்களுக்கு டப்பிங் செய்வதில் சில சவால்கள் உள்ளன. நாம் டப்பிங் பேசும் பெண் கதாபாத்திரங்களின் இயல்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எந்த காட்சிக்கு எப்படி பேச வேண்டும் என்பது நமக்கு கச்சிதமாக தெரியும். 2.0 படத்தில் ஏமி ஜாக்சனுக்கு டப்பிங் செய்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது. காரணம், நான் டப்பிங் பேசும்போது, அது முழுக்க க்ரீன்மேட் காட்சிகளாக இருந்தது. அதன் சூழலை கற்பனை செய்து சரியான உணர்வை கொடுக்க நிறைய சிரமப்பட்டேன். மேலும் என் முதல் படமான 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது இந்த கதாபாத்திரம். கதாநாயகனின் மனைவியாக, வேலைக்கு போகும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். என் வாழ்வில் நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் வாழ்க்கையின் போக்கை மாற்றுகிறது. உண்மையாக என் வாழ்க்கையில் அத்தகைய சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டதில்லை. அதனால் நடிப்பு பயிற்சி மூலம் என்னை தயார் செய்ய வேண்டியிருந்தது" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT