mr.chandramouli

Advertisment

2.0

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த '2.O' படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுருந்த நிலையில் கிராபிக்ஸ் வேலைகளின் தாமதத்தால் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இதனால் படம் எப்போது வெளிவரும் என்று மிகுந்த குழப்பம் நீடித்த நிலையில் நேற்று இயக்குனர் சங்கர், கிராபிக்ஸ் பணிகள் விரைவில் முடிய இருப்பதால் படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்திருந்த அதே நேரத்தில் டார்ஜிலிங்கில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த் தன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்து ஒரே நாளில் ரசிகர்களுக்கு டபுள் சர்பிரைஸ் அளித்தார். இதனைத்தொடர்ந்து விமானநிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">