ADVERTISEMENT

"இவருக்கு எந்த குறையுமே இல்ல" - மாரிமுத்து குறித்து பகிர்ந்த ரமேஷ் கண்ணா

06:22 PM Sep 08, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து (57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலில், டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நக்கீரன் சார்பாக நடிகர் ரமேஷ் கண்ணாவிடம் தொலைபேசி வாயிலாக மாரிமுத்துவின் இரங்கல் குறித்து கேட்டறிந்தோம். அபோது மாரிமுத்துவுடன் நட்பு பற்றி பேசிய அவர், "ஐஸ்வர்யா ராஜேஷ், நான், மாரிமுத்து சார் எல்லேரும் லட்சுமி நாராயணன் டைரக்ட் செய்யும் படத்தில் நடித்தோம். இரவு பகலாக ஷூட்டிங் நடத்தினோம். அதுவும் அடர்ந்த காட்டுக்குள்ள. உற்சாகமாக இருப்பார். நானெல்லாம் டயர்ட் ஆகிட்டாலும் கூட உற்சாகப்படுத்துவார். ஆரோக்கியமான உடல். ஸ்ட்ராங்கான வாய்ஸ். 3 மணி, 4 மணி வரையும் அதே உற்சாகத்துடன் நடிப்பார். அப்படி ஒரு நடிகர்.

அவர் திடீர்னு மறைந்திருப்பது பெரிய ஷாக். ஏன்னா... சாதாரணமா ஒருவர் உடம்பு சரியில்லாமல் இறந்திட்டா சரி ஓகே-னு சொல்லலாம். ஆனால் இவருக்கு எந்த குறையும் இல்ல. உடம்பில் எந்த பிரச்சனையும் கிடையாது. அற்புதமான ஒரு நடிகர். அற்புதமான மனிதர். அவரை இழந்தது கலையுலகத்திற்கு இறப்போ இல்லையோ, என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் எனக்குமான ஒரு இழப்பாக இருக்கு.

நிஜ வாழ்க்கையில் ரொம்ப தமாஷா பேசுவாரு. கருத்துக்களை ஸ்ட்ராங்காக பேசுபவர். அவருக்கு இது போல் நடப்பதற்கு வாய்ப்புகளே கிடையாது. அனால் அவர் மறைந்திருப்பது, என்ன சொல்றது. வார்த்தைகளே இல்லை. எப்போதாவது சந்திக்கிற மனிதர்கள் இறக்கிறார்கள் என்றால் அது பெரிய ஷாக் இருக்காது. சமீபத்தில் சந்தித்த மனிதர்கள் இறக்கும் பொழுது தான் ரொம்ப பெரிய சங்கடமா இருக்கு.

மயில்சாமி இறப்பதற்கு 2 நாள் முன்னாடி அவரிடம் பேசினேன். தயாரிப்பாளர் சக்கரவர்த்தியிடமும் அப்படி தான். 1 வாரம் முன்னாடி பேசியிருப்பேன். இவர்களெல்லாம் நான் அடிக்கடி தொடர்புகொள்கிற மனிதர்கள். இவர்கள் திடீர்னு இறப்பது ஷாக்காக இருக்கு. மனசுக்குள் ஒரு திகில் வருகிறது" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT