ADVERTISEMENT

சூர்யாவிற்கு ஜோடியாகும் 'கர்ணன்' பட நாயகி?

05:26 PM May 03, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த 'கர்ணன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த ரஜிஷா விஜயன், தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். தமிழில் அறிமுகப்படமான கர்ணன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் 'சர்தார்' படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துவருகிறார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ரஜிஷா விஜயனுக்கு கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT