/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_44.jpg)
‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'சர்தார்'. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரானது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நேற்று (25.04.2021) வெளியிடப்பட்டது.
படத்தின் படப்பிடிப்பை நெல்லையில் இன்று தொடங்கியுள்ள படக்குழு, சென்னை மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ‘கர்ணன்’ புகழ் ரஜிஷாவிஜயன் என இரு நடிகைகள் நடிக்க உள்ளனர். மேலும், சிம்ரன், முரளி ஷர்மா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில்நடிக்கின்றனர். பிரபல இந்தி நடிகரான சுயாஸ் பாண்டே இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)