ADVERTISEMENT

'கே.ஜி.எஃப் 2' படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

10:16 AM Apr 16, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் உருவாகியது. யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூரை தொலைபேசியின் மூலம் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், நடிகர் யஷ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். கே.ஜி.எஃப் சேப்டர் 2 திரைப்படம் முதல் நாளிலேயே 134 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT