கன்னடசினிமாவின்முன்னணி நடிகராக இருக்கும் யாஷ்பிரசாந்த் நீல் இயக்கத்தில்'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தில் நடித்துள்ளார்.கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. திரைப்படம் இந்திய அளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகியுள்ளது. இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வரும் படக்குழு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்'கே.ஜி.எஃப் படத்தின் நடிகர்யாஷ் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.நடிப்பை தாண்டி சமூக சேவைகளில் பங்காற்றி வரும் நடிகர் யாஷுடன்இணைவதற்கு பெருமை கொள்வதாகவும், இவரை போன்ற ஒருவர் எங்கள் நிறுவனத்திற்கு விளம்பர தூதராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.