ADVERTISEMENT

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட ராஜமௌலி!

11:50 AM Mar 15, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்' இப்படத்திற்கு தமிழில் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜனவரி மாதம் இப்படம் வெளியாகவிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தடைப்பட்டது. இதனையடுத்து, அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் வெளியாகும் என அறிவித்த படக்குழு, படத்திற்கான இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. படத்தில் நடிகை ஆலியா பட் சீதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை ஆலியா பட் இன்று (15.03.2021) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு அவரது கதாபாத்திரம் குறித்த பிரத்யேக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT