/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vgjv.jpg)
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் வசூலிலும் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. டிவிவி நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தினுடைய மொத்த பட்ஜெட் 550 கோடி ரூபாய்.
இந்நிலையில், படம் வெளியான முதல் நாளிலேயே 223 கோடி ரூபாய் வசூல் செய்து முந்தைய சாதனைகள் அனைத்தையும் இப்படம் முறியடித்தது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது படத்தினுடைய மூன்று நாள் வசூல் நிலவரம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 'ஆர்ஆர்ஆர்' படம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் வசூலில் 500 கோடியை கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த வாரமும் இந்தியாவில் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகப்போவதில்லை என்பதால், இவ்வாரத்திலும் மிகப்பெரிய வசூலை படம் அள்ளும் என்கின்றனர் திரைத்துறையினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)