ADVERTISEMENT

நாசரை கலாய்த்த ராதாரவி 

04:37 PM Aug 04, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

கே.என்.ஆர் மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் 'பொறுக்கிஸ் அல்ல நாங்கள்'. பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S 'பொறுக்கிஸ்' படம் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் நடிகரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் நடிகர் ராதாரவி பேசும்போது....."இந்தக் குடும்பத்தில் நானும் ஒருவன். மலேசியாவில் எனது நண்பர் ஒருவர் சொந்தப் படம் எடுக்கிறேன் எனக் கூறியபோது மஞ்சுநாத்தை அழைத்துச் சென்று கேமராமேனாக அறிமுகம் செய்துவைத்தேன். மற்றபடி இப்போதுவரை அவரது சுய உழைப்பு தான்.

மஞ்சுநாத் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் புரட்சிகரமான கருத்துக்களை கொண்டவர். இந்தப்படத்தில் பாடியுள்ள பாடகர் ஆலயமணியை எனக்கு பிடிக்கும். இன்றைக்கு யார் யாரோ பாடும்போது, முன்னணி நடிகர்கள் எல்லாம் பாடும்போது, அவர்களைவிட, ஆலயமணி நன்றாக பாடக்கூடியவர். எனக்கு பாட வராது. அதனாலேயே அவரைப் பிடிக்கும். பியூஸ் மனுஷ் இந்த விழாவில் கலந்துகொள்கிறார் என்றதுமே பயந்தேன். காரணம் அவர் எப்போதும் வாரண்ட்டோடு சுற்றுபவர். அவருக்கும் எப்போதுமே பொதுவுடமை எண்ணம். அதனால் நம்மையும் வாரண்ட்டோடு சுற்ற வைத்து விடுவாரோ என்றும் அரசியல் மேடை போல இது ஆகிவிடுமோ என்றும் பயந்தேன். காரணம் சென்சாரில் பிரச்னையில்லாமல் தப்பிக்கவேண்டுமே என்பதுதான். இது அரசாங்கத்தை அட்டாக் பண்ணுகிற படமே அல்ல. அரசாங்கத்தில் உள்ள குறைகளைப் பற்றி சொல்லும் படம் இந்த விழாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரை அழைத்திருந்தேன். முதலில் வருகிறேன் எனச் சொன்னவர், பின் எதனாலோ வராமல் பின்வாங்கிவிட்டார். ஒருவேளை இங்கு வருபவர்களின் பட்டியலைப் பார்த்திருப்பாரோ என்னவோ...?" என்றார் நகைச்சுவையாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT