ADVERTISEMENT

ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த 'புஷ்பா' படக்குழு 

12:15 PM Nov 29, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'புஷ்பா' படத்தின் ட்ரைலர் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'புஷ்பா' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT